/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேவனுார்புதுாரில் பயணியர் தவிப்பு நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்
/
தேவனுார்புதுாரில் பயணியர் தவிப்பு நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்
தேவனுார்புதுாரில் பயணியர் தவிப்பு நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்
தேவனுார்புதுாரில் பயணியர் தவிப்பு நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 25, 2025 10:34 PM
உடுமலை, ; உடுமலை தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை இல்லாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
உடுமலையிலிருந்து- ஆனைமலை ரோட்டில், திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையில், தேவனுார்புதுார் உள்ளது. இக்கிராமத்துக்கு, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து, 20க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
உடுமலை - ஆனைமலை ரோடு, பொள்ளாச்சி ரோடு என பல்வேறு ரோடுகள் இச்சந்திப்பு பகுதிக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். இங்கிருந்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
ஆனால், அப்பகுதியில் பயணியர் காத்திருக்க நிழற்கூரை வசதியில்லை. இதனால், பயணியர், பஸ்சுக்காக வெயிலிலும், அருகிலுள்ள கடைகளின் முன்புறமும் நிற்க வேண்டியுள்ளது.
காலை, மாலை நேரங்களில், மாணவர்கள், அதிகமாக பாதிக்கின்றனர். எனவே, இரு வழித்தடத்திலும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்க வேண்டும்.
அதே போல், அதிகளவு பஸ்கள் வந்து செல்லும் நிலையில், ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்படுவதால், மூன்று ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. எனவே, தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.