/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2024 10:11 PM

உடுமலை : உடுமலை கிளை, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலை வட்டார கல்வி அலுவலகம் முன், 'டிட்டோ ஜாக்' எனப்படும், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு உடுமலை சங்கத்தினர், நேற்றுமுன்தினம் மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். அரசாணை நிலை எண் 243 குறித்து, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் வண்ணன் பேசினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அசோக்குமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் கிருஷ்ணவேணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் அதன் செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ராமராஜா ஆகியோர் அரசாணை ரத்து செய்வது குறித்து பேசினர்.
ஆசிரியர் நாகராஜ் நன்றி தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.