/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கூடத்திற்கு எதிராக 12ல் ஆர்ப்பாட்டம்
/
மதுக்கூடத்திற்கு எதிராக 12ல் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 10, 2024 12:19 AM

அவிநாசி;விநாசி, சேவூர் ரோடு, சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் கடந்த மாதம் மனமகிழ் மன்றம் பெயரில் தனியார் மதுக்கூடம் திறக்கப்பட்டது.
பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரும் 15ம் தேதி வரை இதை இடம் மாற்ற கால அவகாசம் வழங்கப்பட்டு, மக்களின் எதிர்ப்பை அரசுக்கு உரிய முறையில் தெரியப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'நவீன மதுக்கடை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு' என்ற பெயரில் அவிநாசி அனைத்து வணிகர் சங்கம், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., தலித் விடுதலை கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பன்னீர்செல்வம் அணி, மக்கள் நீதி மய்யம், ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், சிவசேனா, ஹிந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் நடந்தது.
வரும் 12ம் தேதி(நாளை மறுநாள்) அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மனமகிழ் மன்றத்திற்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அவிநாசி நகர மக்களும் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

