/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம்
/
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம்
ADDED : ஜூலை 25, 2024 10:38 PM

உடுமலை : உடுமலை அமராவதி அணைப்பகுதியில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, ஒத்திகை பயிற்சி நடந்தது.
அமராவதி அணை மற்றும் கல்லாபுரம், பிரதான கால்வாய் வழித்தடத்தில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன.
இப்பகுதிகளில், தென் மேற்கு பருவ மழையை முன்னிட்டு, வெள்ள காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடுமலை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான வீரர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.