ADDED : ஆக 17, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
புதுப்பாளையம் ஊராட்சி சாமந்தன்கோட்டை–வெங்கமேடு தார் சாலையை சீரமைக்கவும், ரத்தினசாமி நகர், பாரதி நகரில் 7 வீதிகளில் வடிகால் அமைக்கவும் வலியுறுத்தி, மா.கம்யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னுசாமி தலைமை வகித்தார். சஜிதா வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, மா.கம்யூ. மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், தங்கமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் நவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
–––
ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மா.கம்யூ. கட்சியினர்.
