/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ 5.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் திட்டம்
/
ரூ 5.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் திட்டம்
ரூ 5.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் திட்டம்
ரூ 5.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் திட்டம்
ADDED : செப் 05, 2024 12:38 AM

அவிநாசி : அவிநாசி வட்டாரத்தில், வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவுற்ற பணிகள் திறப்பு விழா நடந்தது.
நீலகிரி எம்.பி., உள்ளூர் வளர்ச்சி நிதியில் 11.63 லட்சம் ரூபாயில், ராமநாதபுரம் கிராமத்தில், பால் உற்பத்தியாளர் சங்க கட்டடம், நாதம்பாளையம், புதுப்பாளையத்தில், தலா, 10 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பொது விநியோக கடை ஆகியவற்றை,எம்.பி., ராஜா திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவிநாசி வாரச்சந்தையில், 4.13 கோடி ரூபாயில், 144 கடைகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., செல்வராஜ், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, நகர செயலாளர் வசந்தகுமார், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி நிர்வாகி அவிநாசியப்பன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.