/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுந்தரருக்கு கட்டமுது பக்தர்கள் நெகிழ்ச்சி
/
சுந்தரருக்கு கட்டமுது பக்தர்கள் நெகிழ்ச்சி
ADDED : மார் 25, 2024 12:58 AM

அவிநாசி:சுந்தரமூர்த்தி நாயனார் திருமுருகன் பூண்டியில் இருந்து நடைபயணமாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்து கொண்டிருந்தார்.
களைப்பு மற்றும் பசியால் வாடி உமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் மடத்தில் பசி மயக்கத்தில் சாய்ந்து இளைப்பாறுகிறார் .
சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலை கண்ட அவிநாசியப்பரும், கருணாம்பிகை தாயாரும் தங்கள் திருகரங்களால் அமுது எடுத்துக் கொண்டு சாதாரண ஏழை விவசாயிகள் போல சுந்தரருக்கு அமுது படைத்து பசியாற்றி கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இதை நினைவுகூரும் வண்ணம், அவிநாசி கோவிலிலிருந்து சுந்தரர், அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள உமையஞ்செட்டியார் தண்ணீர் பந்தல் மடத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டார். அமுதுடன் சுவாமி - அம்பாள் தண்ணீர் பந்தலுக்கு வருகை புரிந்து சுந்தரரை கோவிலுக்கு அழைத்துச் செல்லும் பாரம்பரிய விழா நடைபெற்றது.
ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் எழுந்தருளி கட்டமுது கொடுத்து சுந்தரரை வரவேற்கும் நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

