ADDED : ஆக 09, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், ஆக. 10–
தேசிய குடற்புழு நீக்கும் தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 19 வயது வரை உள்ள 7.5 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 2.4 லட்சம் பெண்களுக்கு (கர்ப்பிணி, பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு வரும் 17-ம் தேதி மீண்டும் வழங்கப்படும். மாத்திரையை காலை அல்லது மதிய உணவுக்குப் பிறகு உட்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
