ADDED : ஆக 09, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை - தன்பாத் சிறப்பு ரயில் (எண்:06063), வெள்ளிதோறும் அதாவது, வரும் 16, 23, 30ம் தேதிகளில் இயங்கும்.
காலை, 11:50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம், 12:40 மணிக்கு திருப்பூர் வரும். ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வடமாநிலங்கள் வழியாக பயணித்து, ஞாயிறு காலை, 8:30 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் சென்றடைகிறது. மறுமார்க்கமாக, திங்கள், காலை, 6:00 மணிக்கு தன்பாத்தில் புறப்படும் ரயில், புதன் அதிகாலை, 3:45 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த ரயில், ஆக., 12, 19, 26 மற்றும் செப்., 2 தேதிகளில் இயங்கும்.

