/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோர ஓடைகள் துார்வாரி சீரமைப்பு
/
ரோட்டோர ஓடைகள் துார்வாரி சீரமைப்பு
ADDED : ஆக 12, 2024 11:41 PM

திருப்பூர்;ரோடுகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் ரோட்டோரங்களில் உள்ள ஓடை மற்றும் நீர் வழிப்பாதைகள் துார் வாரி சீரமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தற்போது இந்த மழை பெய்து வருகிறது. இம்மழை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த மழையின் போது, ரோட்டோரம் உள்ள ஓடைகளில் மழை நீர் தடையின்றி செல்லும் வகையிலும், ரோட்டில் மழை நீர் சென்று பாயாத வகையிலும் பணி மேற்கொள்ள நெடுஞ்சாலை துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் ரோட்டில் மழை நீர் தேங்கி பெரும் அவதி நிலவும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து திருப்பூரில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் உள்ள காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோட்டோர ஓடைகள், மழை நீர் வடிகால்கள் துார் வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் நகரப் பகுதி முதல் காங்கயம் வரையில் இந்த ரோட்டில் உள்ள சிறு ஓடைகள், பள்ளங்கள் கடந்து செல்லும் பாலங்கள், மழை நீர் வடிகால்களில் துார் வாரி சுத்தப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
இவற்றில் நிரம்பியுள்ள மண் திட்டுகள், வளர்ந்து நிற்கும் செடி கொடிகள் அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் மும்முரமாக மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறுபாலங்கள் மீது அமைந்துள்ள தடுப்பு சுவர்களிலும் வெள்ளையடிக்கும் பணியும் நடக்கிறது.
----
திருப்பூர், காங்கயம் ரோடு பகுதியில், மழை நீர் தேங்காமல் இருக்க, ரோட்டோரம் உள்ள கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் துார்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.