/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துார்வாரிய வாய்க்காலுக்கு குப்பை கழிவால் ஆபத்து; இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி
/
துார்வாரிய வாய்க்காலுக்கு குப்பை கழிவால் ஆபத்து; இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி
துார்வாரிய வாய்க்காலுக்கு குப்பை கழிவால் ஆபத்து; இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி
துார்வாரிய வாய்க்காலுக்கு குப்பை கழிவால் ஆபத்து; இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 24, 2024 11:58 PM

திருப்பூர் : மண்ணரை குளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் அருகே கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர், அணைக்காடு பகுதியில் நொய்யல் ஆற்றில் உள்ள அணைக்கட்டிலிருந்து, பிரதான வாய்க்கால் அமைந்துள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மண்ணரை குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது.
நீண்ட முயற்சிக்குப் பின் வாய்க்கால் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வாய்க்கால் செல்லும் வழியில் கருமாரம்பாளையம் - மணியகாரம்பாளையம் ரோட்டில், வாய்க்காலுக்கும் ரோட்டுக்கும் இடையேயுள்ள இடத்தில் குப்பைக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
அருகேயுள்ள பனியன் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், மாநகராட்சி பேட்டரி வாகனத்தில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். இந்த குப்பை அகற்றப்படாமல் சில நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
எனவே, துார்வாரி குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் தயார் படுத்தப்படும் வாய்க்காலில் குப்பை கழிவுகள் தேங்கினால், நீர் செல்வது தடைபடும். குளத்தில் தேங்கும் நீரும் மாசுபடும் அபாயம் உள்ளது.
எனவே, வாய்க்காலை ஒட்டி குப்பை கழிவுகள் தேங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

