/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதிலமடைந்த பாலம் அதிகரிக்கும் விபத்துகள்
/
சிதிலமடைந்த பாலம் அதிகரிக்கும் விபத்துகள்
ADDED : ஆக 13, 2024 11:56 PM

உடுமலை:உடுமலை நகராட்சி பகுதிகளில், மழைநீர் வடிகால் பாலங்கள் கட்டுமான பணியில் குளறுபடி காரணமாக, விபத்து ஏற்படுத்தி வருகிறது.
உடுமலையில், ரோடுகளில் மழைநீர் வடிகால், தரைமட்டப்பாலங்கள் அமைந்துள்ளன. இவை போக்குவரத்துக்கும், மழைநீர் செல்வதற்கும் உதவி வருகின்றன. ஆனால், பெரும்பாலான மழைநீர் வடிகால் பாலங்கள், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன.
இவற்றை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், உடுமலை நகராட்சி சார்பில், கச்சேரி வீதி - கல்பனா ரோடு சந்திப்பு, குட்டை திடல் - காந்திசவுக் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை நீர் வடிகால் மற்றும் பாலம் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது.
முறையான வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் இல்லாமல், ரோடு மட்டத்திலிருந்து உயரமாக அமைக்கப்பட்டது. அதே போல், தரமற்ற கான்கிரீட் பணி காரணமாக, கட்டி ஒரு சில மாதங்களில், கான்கிரீட் பெயர்ந்து, சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதனால், அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை புதுப்பிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.