/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் மையத்துக்கு 'டிப்மா' நிதியுதவி
/
புற்றுநோய் மையத்துக்கு 'டிப்மா' நிதியுதவி
ADDED : ஆக 23, 2024 02:30 AM

திருப்பூர்:திருப்பூர் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு, 'டிப்மா' சங்கம் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ள, அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மைய கட்டட கட்டுமான பணிக்கு, மக்களின் பங்களிப்பாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க(டிப்மா) அலுவலகத்தில் கல்வெட்டு திறப்பு விழா மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது.
சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற ரோட்டரி பொதுநல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், கல்வெட்டை திறந்து வைத்தார்.
'டிப்மா' சார்பில், புற்றுநோய் மையத்துக்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை, டாக்டர் முருகநாதனிடம் வழங்கினர். பொருளாளர் அருள்செல்வன், தெற்கு ரோட்டரி சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சில மாதங்களுக்கு முன், 'டிப்மா' தலைவர் சண்முகம் தனது சொந்த நிதியாக, ஏற்கனவே, ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். தற்போது சங்கத்தினர் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

