/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விரைவு' திட்டத்திலும் இணைப்பு 'தாமதம்' மின்வாரியம் மீது அதிருப்தி
/
'விரைவு' திட்டத்திலும் இணைப்பு 'தாமதம்' மின்வாரியம் மீது அதிருப்தி
'விரைவு' திட்டத்திலும் இணைப்பு 'தாமதம்' மின்வாரியம் மீது அதிருப்தி
'விரைவு' திட்டத்திலும் இணைப்பு 'தாமதம்' மின்வாரியம் மீது அதிருப்தி
ADDED : மார் 06, 2025 09:58 PM
உடுமலை,; 'தட்கல்' திட்ட, விண்ணப்பங்களும் கிடப்பில் போடப்பட்டு, மின் இணைப்பு கிடைக்காததால், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடுமலை மின்பகிர்மான வட்டத்தில், விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக, விளைநிலங்களில், கிணறு மற்றும் போர்வெல் அமைத்து காய்கறி சாகுபடி செய்ய, இலவச மின் இணைப்பு அத்தியாவிசயமாக உள்ளது.
வழக்கமான திட்டங்களில் மின் இணைப்பு நீண்ட காலமாகிறது. எனவே, மின்வாரியத்தால், 'தட்கல்', விரைவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திட்டத்தின் கீழ், 5 எச்.பி., க்கு, ரூ. 2.5 லட்சம்; 7.5 எச்.பி.,க்கு, ரூ. 2.75 லட்சம்; 10 எச்.பி., திறனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பணம் செலுத்தி, சில மாதங்களில், இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், கடந்தாண்டு இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த நுாற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோடை காலம் துவங்கியுள்ளதால், சாகுபடிக்கு, கிணறு மற்றும் போர்வெல்களில் இருந்து, தண்ணீர் இறைக்க, மின் இணைப்பு இல்லாத விவசாயிகள் பாதிக்கப்பட்டு மின்வாரியம் மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, மின்வாரியம், பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்.