நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர், மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அட்சய திருதியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பாண்டியன் நகரில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி, அன்னதானத்தை துவக்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் வெங்கடேஷ், கந்தசாமி, பாலகிருஷ்ணன்,திலகவதி, கலியமூர்த்தி, லோகு, தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.