/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு காலணிகள் வினியோகம்
/
மாணவர்களுக்கு காலணிகள் வினியோகம்
ADDED : ஆக 06, 2024 09:55 PM
உடுமலை : உடுமலை வட்டார அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கான நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
மாநில அரசின் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நலத்திட்ட பொருட்கள் கல்வியாண்டு தோறும் வழங்கப்படுகின்றன.
உடுமலை வட்டாரத்தில் உள்ள, 112 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கான வண்ண கிரயான்கள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டன.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரயான்களும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலணிகளும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ்களும் வழங்கப்படுகின்றன.
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் தாரணி நலத்திட்ட பொருட்களை வழங்கினார். சுற்றுப்பகுதி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் நலத்திட்ட பொருட்களை வினியோகித்தனர்.