/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட சதுரங்க போட்டி; சாதித்தது 'பிரன்ட்லைன்'
/
மாவட்ட சதுரங்க போட்டி; சாதித்தது 'பிரன்ட்லைன்'
ADDED : ஆக 08, 2024 12:08 AM

திருப்பூர்: திருப்பூர் சகோதயா சார்பில், மாவட்ட சதுரங்க போட்டி, வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
இதில், மாவட்டம் முழுதும் இருந்து, 40 பள்ளிகளை சேர்ந்த, 200 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். பதினாறு வயது பிரிவில், ஒன்பதாம் வகுப்பு மாணவி, ஜெஸ்லின் ஜெனிஷா முதலிடம், இதே பிரிவில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் விஷ்வாக் இரண்டாமிடம், 12 வயது பிரிவில், ஆறாம் வகுப்பு மாணவர் சஸ்வின் ஆதித்யா மூன்றாமிடம் பெற்றனர். மாணவ, மாணவியர், சதுரங்க பயிற்சியாளர் முகேஷ், உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் ஆகியோரை, பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.