ADDED : ஜூலை 25, 2024 12:10 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட அளவில் ஜூனியர் மற்றும் சீனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் சென்னிமலை காந்தி விளையாட்டு பயிற்சி மையத்தில் நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள், விளையாட்டுப் பயிற்சி மையங்களைச் சேர்ந்த, 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், பிரன்ட் லைன் குழும பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இப்போட்டியானது, 12 - 20 வயது பிரிவில் நடைபெற்றது.இதில், 12 வயது பிரிவு, உயரம் தாண்டுதல் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில், முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு; குண்டு எறிதலில் இரண்டாம் பரிசு.
400 மீ., ஓட்டத்தில், 2ம் பரிசு பெற்றனர். 16 வயது பிரிவு உயரம் தாண்டுதலில் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில் முதல் பரிசு. மும்முறை தாண்டுதலில், முதல் பரிசு; குண்டு எறிதலில் இரண்டாம் பரிசு பெற்றனர்.
இதுதவிர, 18 வயது பிரிவு உயரம் தாண்டுதல் மாணவர் பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு, 400 மீ., ஓட்டத்தில், 2ம் பரிசும் பெற்றனர். 20 வயது பிரிவு, மும்முறை தாண்டுதல் மாணவர் பிரிவில் முதல் மற்றும்மூன்றாம் பரிசு பெற்றனர்.
இவ்வாறு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரையும், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் நந்தகுமார், ராஜலட்சுமி ஆகியோரையும், பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, பள்ளி இயக்குநர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.