/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : செப் 02, 2024 02:04 AM

உடுமலை:உடுமலை பகுதிகளில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவும், முறையாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல் சார் வாரியம் முதன்மை செயல் அலுவலர் வள்ளலார், உடுமலை பகுதிகளில் நேற்றுமுன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவர், குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், விற்பனை செய்யப்படும் உணவு எண்ணெய், பருப்பு, உளுந்து, கொள்ளு, நாட்டுச்சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, உடுமலை அரசு மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, தங்கும் அறைகள் மற்றும் உணவு சமைக்கும் சமையல்கூடம், வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலை நகராட்சியில், ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பஸ் ஸ்டாண்டில், தரை தளத்தில் அமைக்கப்பட்டு வரும் கடைகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தை தாய்மார்கள் காத்திருக்கும் அறை, தகவல் மையம், பேவர் பிளாக், விளக்குகள் அமைக்கும் பணி, நுழைவாயில், மேற்கூரை அமைக்கும் பணி, தரை தளம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ததோடு, விரைவில் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தினார்.
மேலும், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி, பாலப்பம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் சமையல் கூடம், சத்து மாவு, குழந்தைகள் விளையாடும் இடம், அடிப்படை கல்வி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பாலப்பம்பட்டியில் தோட்டக்கலைத்துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு, நுாறு சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட நுண்ணுயிர் பாசன திட்டத்தை ஆய்வு செய்தார்.
உடுமலை அரசு கல்லுாரி அருகிலுள்ள, மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவியரின் எண்ணிக்கை, வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.