sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீபாவளி 'ஆர்டர்' வரும்! பின்னலாடை உற்பத்தியாளர் நம்பிக்கை

/

தீபாவளி 'ஆர்டர்' வரும்! பின்னலாடை உற்பத்தியாளர் நம்பிக்கை

தீபாவளி 'ஆர்டர்' வரும்! பின்னலாடை உற்பத்தியாளர் நம்பிக்கை

தீபாவளி 'ஆர்டர்' வரும்! பின்னலாடை உற்பத்தியாளர் நம்பிக்கை


ADDED : செப் 09, 2024 11:36 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெற்றுள்ளதால், வரும் வாரங்களில் இருந்து, வடமாநில தீபாவளி ஆர்டர் திருப்பூருக்கு வரத்துவங்கும் என, பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

திருப்பூர் பின்னலாடை கேந்திரம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய புள்ளியாக மாறியிருக்கிறது. ஏற்றுமதி வர்த்தகம், பல மாதங்களுக்கு பின், இயல்புநிலைக்கு திரும்பி, வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அதேபோல், பஞ்சு - நுால் விலை பாதிப்பால் சுணக்கம் முடைந்த உள்நாட்டு விற்பனைக்கான பனியன் உற்பத்தி தொழில், வங்கதேச ஆடை இறக்குமதியால் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. தரத்தில் முதலாவதாக நாம் இருந்தாலும், விலையில் வங்கதேச ஆடைகள் வென்று விடுகின்றன.

உள்நாட்டு சந்தைகளையும், வங்கதேச ஆடைகள் ஆக்கிரமித்து வருவதால், திருப்பூரில் உற்பத்தியாகும், பருத்தி பின்னலாடை வர்த்தகம் மந்தமாகி விட்டது. திருப்பூர் தொழில்துறையினரும், பருத்தி ஆடைகளுடன், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டிய நெருக்கடியும், தன்னிச்சையாக உருவாகியுள்ளது.

உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தி தொழிலில், தீபாவளி பண்டிகை ஆர்டர் என்பது, ஓராண்டில் மிக முக்கியம். நாடு முழுவதும் இருந்து ஆர்டர்கள் வருவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும், தீபாவளி ஆர்டர்கள் வரத்துவங்கி உள்ளன.

------------------

அனைவருக்கும் படம் வைக்க வேண்டும்

----------------------------------------------------------

ஆர்டர் வந்தாச்சு...

அக்., 31ல் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை என்பது, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சிறப்பாக இருக்கும். நுால் விலை சீராக இருந்தால், பண்டிகை ஆர்டர்கள் செழிப்பாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும், வடமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வரத்துவங்கும். உத்தேச ஆர்டர்களை கணக்கிட்டு, முன்கூட்டியே உற்பத்தியை துவக்கியுள்ளோம். பண்டிகைக்கு, 20 நாள் முன்னதாக, சரக்கு அனுப்பியாக வேண்டும் என்பதால், உற்பத்தியை துவக்கி தயார்நிலையில் இருக்கிறோம்.

- ஈஸ்வரன்

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்

சங்க (சைமா) தலைவர்

------------------

வர்த்தக விசாரணை

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ஆர்டர்கள், திருப்பூருக்கு கைகொடுக்கும். இந்தாண்டு பண்டிகைகால வியாபாரத்துக்கான, வர்த்தக விசாரணை துவங்கியிருக்கிறது. எனவே, இந்தாண்டு தொழில் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

- ரவிச்சந்திரன்

திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை

உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்

------------------

'போனஸ்' போல...

உள்நாட்டு விற்பனைக்கான பனியன் ஆடை விற்பனை சற்று மந்தமாக இருக்கிறது. தீபாவளிக்கான, மொத்த ஆர்டர்கள் இனிமேல்தான் கிடைக்கும். இந்தாண்டு, வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், திருப்பூருக்கு கூடுதலான ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது. இது, இந்தாண்டுக்கான தீபாவளி 'போனஸ்' போல் கைகொடுக்கும் என்று நம்புகிறோம்.

- நாகராஜ்

திருப்பூர் காதர்பேட்டை செகண்ட்ஸ்

பனியன் வியாபாரிகள் சங்க தலைவர்

------------------

பாலியஸ்டர் ஆடை ஆதிக்கம்

வடமாநிலங்களில், விலை குறைவு என்பதால் பாலியஸ்டர் பின்னலாடைகள் அதிகம் விற்கப்படுகிறது; பருத்தி ஆடைகளுக்கான வரவேற்பு குறையாது என்றாலும், திருப்பூரில் பாலியஸ்டர் ஆடை உற்பத்தியை மேலும் அதிகப்படுத்தினால், வடமாநில ஆர்டர்களை அதிகம் கைப்பற்றலாம். தீபாவளி விற்பனை அடுத்த மாதம் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது

- முகமது ஷபி

திருப்பூர் குறு, சிறு உள்நாட்டு பனியன்

உற்பத்தியாளர் சங்க தலைவர்

தீபாவளி ஆர்டர் கிடைத்ததும், இம்மாத இறுதிக்குள் உற்பத்தி செய்து, மொத்த விற்பனையாளருக்கு அனுப்பியாக வேண்டும். அங்கிருந்து, 10 நாட்களுக்குள் ரீடெயில் விற்பனைக்கு செல்லும். பண்டிகைக்கு, 10 நாளுக்கு முன்னரே, ஒவ்வொரு கடைகளிலும், ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் உள்ளாடைகள் விற்பனை களைகட்டப்போகிறது






      Dinamalar
      Follow us