ADDED : ஏப் 19, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் - முதலிபாளையம் ஊராட்சியில், பொன்னாபுரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் மொத்தம் ஏழு ஓட்டுச் சாவடிகள் உள்ளன. நேற்று மதியம் எண்: 300 மற்றும் 301 ஆகிய ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டளிக்க வரிசையில் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தி.மு.க. வினர் சிலர், தங்கள் கட்சி சின்னத்தைக் காட்டி, ஓட்டு போடுமாறு பிரசாரம் செய்தனர்.தகவல் அறிந்த பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் அங்கு விரைந்தனர். ஓட்டுச் சாவடி மையத்துக்குள் வந்து சின்னத்துடன் ஓட்டு கேட்பதுதவறு என்று கூறி, தி.மு.க.,வினரிடம் தெரிவித்தனர். இரு தரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, 10 நிமிடம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பினரையும், ஓட்டுச்சாவடியில் இருந்து வெளியேற்றினர்.

