/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டி.என்.சி., சிட்ஸ் நிறுவனம் திருப்பூரில் கிளை திறப்பு
/
டி.என்.சி., சிட்ஸ் நிறுவனம் திருப்பூரில் கிளை திறப்பு
டி.என்.சி., சிட்ஸ் நிறுவனம் திருப்பூரில் கிளை திறப்பு
டி.என்.சி., சிட்ஸ் நிறுவனம் திருப்பூரில் கிளை திறப்பு
ADDED : ஏப் 27, 2024 01:43 AM

திருப்பூர், ஏப். 27-
கடந்த 59 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் செயல்பட்டு வரும், டி.என்.சி., சிட்ஸ் நிறுவனத்தின் 44வது கிளை திருப்பூர், நெசவாளர் காலனி, பி.என்., ரோடு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கட்டடத்தின் முதல் தளத்தில் நேற்று திறக்கப்பட்டது.
டி.என்.சி., குழுமங் களின் தலைவர் இளங்கோவன், இயக்குனர்கள் மீனா இளங்கோவன், பிரேம் இளங்கோவன், சினேகா பிரவீன், சாரதா பள்ளி தலைவர் வேலுச்சாமி, ஸ்ரீசக்தி சினிமாஸ் இயக்குனர் திருப்பூர் சுப்பிரமணியம், 'கிளாசிக் போலோ' இயக்குனர் சிவராம் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றிவைத்து, துவக்கி வைத்தனர்.
டி.என்.சி., நிறுவன செயலாக்க தலைவர்கள் சென்னை மண்டல இயக்குனர் பார்த்திபன், கிருஷ்ணகிரி மண்டல இயக்குனர் பிரித்விராஜ் மற்றும் பிரதாப்ராஜ், கோவை மண்டல இயக்குனர் பிரதீப்குமார், நிதி இயக்குனர் விவேகானந்தன், சட்ட ஆலோசகர் முரளி (கூடுதல் எஸ்.பி., ஓய்வு), 'டிரீம்ஸ் அலையன்ஸ் மேட்ரிமோனி' இயக்குனர் ராஜா, சென்னை மண்டல பொதுமேலாளர் நவநீதன் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் கிளையில், 2 லட்சம் முதல், இரண்டு கோடி ரூபாய் வரையிலான, சீட்டு திட்டங்கள் துவங்கப்படுகிறது. திறப்பு விழா ஏற்பாடுகளை, மண்டல தலைமை நிர்வாகி மகாலிங்கம், மேலாளர் (பெசிலிட்டி) மகேஸ்வரன், கிளை மேலாளர் சண்முகம் மற்றும் கிளை ஊழியர்கள் செய்திருந்தனர்.

