/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2ல் 'நம்பர் 1' சாதனை பிளஸ் 1 தேர்விலும் வசமாகுமா?
/
பிளஸ் 2ல் 'நம்பர் 1' சாதனை பிளஸ் 1 தேர்விலும் வசமாகுமா?
பிளஸ் 2ல் 'நம்பர் 1' சாதனை பிளஸ் 1 தேர்விலும் வசமாகுமா?
பிளஸ் 2ல் 'நம்பர் 1' சாதனை பிளஸ் 1 தேர்விலும் வசமாகுமா?
ADDED : மே 12, 2024 11:56 PM
திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வை மொத்தம், 26 ஆயிரத்து, 851 பேர் எழுதினர்.
நாளை காலை 9:30க்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பிளஸ் 1 தேர்வு முடிவுகளை பொறுத்தவரை, கொரோனாவுக்கு முன் 2018, 2019 இரண்டு ஆண்டுகளும் மாநிலத்தில் திருப்பூர் இரண்டாம் இடம் பெற்றது. கடந்த 2020ல் மூன்று இடங்கள் பின்தங்கி, ஐந்தாமிடத்தை எட்டியது திருப்பூர் ; 2021ல் 'ஆல் பாஸ்'.
கடந்த, 2022ல் பிளஸ் 1 தேர்வில் மாநிலத்தில், 11வது இடம் பெற்ற திருப்பூர், கடந்தாண்டு, 96.83 சதவீத தேர்ச்சியுடன், பத்து இடங்கள் முன்னேறி, மாநிலத்தில் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றது. நடப்பாண்டு பிளஸ் 2வில் முதலிடம் பெற்று சாதித்த திருப்பூர், பிளஸ் 1 தேர்வு முடிவில் முதலிடத்தை மீண்டும் பெற்று சாதனை படைக்குமா என்பது நாளை காலை தெரியும்.