/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளத்தில் வண்டல் மண் இல்லை முறைகேடுகள் தவிர்க்கப்படுமா?
/
குளத்தில் வண்டல் மண் இல்லை முறைகேடுகள் தவிர்க்கப்படுமா?
குளத்தில் வண்டல் மண் இல்லை முறைகேடுகள் தவிர்க்கப்படுமா?
குளத்தில் வண்டல் மண் இல்லை முறைகேடுகள் தவிர்க்கப்படுமா?
ADDED : ஜூலை 30, 2024 01:34 AM
பொங்கலுார்;திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்களில் வண்டல் மண் காலி ஆகிவிட்டது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்திலேயே வண்டல் மண் என்ற பெயரில் பல குளங்களில் கிராவல் மண் தான் எடுக்கப்பட்டன. அதில், பல குளங்கள் பாறை காணும் அளவுக்கு மண் வெட்டப்பட்டது. தற்போது, கிராவல் மண் வெட்டி கடத்தப்படுகிறது என்று விவசாய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. அந்த குற்றச்சாட்டிலும் நியாயம் உள்ளது.
குளங்களை கண்காணிக்கும் பொறுப்பு வருவாய்த்துறைக்கு உள்ளது. ஆனால், அவர்கள் பல நேரங்களில் சோடை போய் விடுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண ஒவ்வொரு குளங்களைச் சுற்றிலும் உள்ள சர்வே எண்களைக் கொண்டு விவசாயிகளை ஒருங்கிணைத்து பாசன சபைகளை உருவாக்க வேண்டும்.
குளத்தில் வண்டல் மண் எடுக்க பாசன சபை தலைவர்கள், வருவாய்த்துறை, ஊராட்சி தலைவர் ஆகியோர் கொண்ட முத்தரப்பு குழுவை அமைத்து, அவர்கள் மூன்று பேரும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வண்டல் மண் எடுக்க முடியும் என்று விதிகளை உருவாக்க வேண்டும். அப்போது மட்டுமே குளங்கள் காப்பாற்றப்படும்.