/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாய்ப்பால் தானம் இளம் தாய்க்கு பாராட்டு
/
தாய்ப்பால் தானம் இளம் தாய்க்கு பாராட்டு
ADDED : ஆக 18, 2024 12:44 AM

திருப்பூர்:அதிகளவில் தாய்ப்பால் தானம் வழங்கிய இளம் தாய்க்கு ரோட்டரி அமைப்பு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் பிரைட் ரோட்டரி அமைப்பு மற்றும் சுவாசம் தாய்ப்பால் அமைப்பு ஆகியன இணைந்து இளம் தாய்மார்களிடம் தாய்ப்பால் தானம் பெற்று வழங்கி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும், 103 லி., அளவு தாய்ப்பால் தானம் வழங்கிய திருப்பூரைச் சேர்ந்த கவுசல்யா மாரிமுத்து என்பவருக்கு பிரைட் ரோட்டரி சங்கம் பாராட்டு தெரிவித்து பரிசளித்து கவுரவித்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவர் பிரியா விசுவாசம் பரிசு வழங்கினார். ரோட்டரி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் பிரசன்னசூர்யா ஆகியோர் உடனிருந்தனர்.

