/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரைவு வழிகாட்டு மதிப்பு நிர்ணயம்; பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு
/
வரைவு வழிகாட்டு மதிப்பு நிர்ணயம்; பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு
வரைவு வழிகாட்டு மதிப்பு நிர்ணயம்; பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு
வரைவு வழிகாட்டு மதிப்பு நிர்ணயம்; பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு
ADDED : மார் 04, 2025 06:13 AM
உடுமலை; பதிவுத்துறை சார்பில், நிலங்களுக்கான வரைவு வழிகாட்டு மதிப்பு நிர்ணயித்து, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
முத்திரை சட்டத்தின் கீழ், சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல்,
வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக, திருப்பூர் மாவட்டத்தில், குடியிருப்பு மற்றும் விளை நில பகுதிகளுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பினை சீரமைப்பது குறித்து, திருப்பூர் மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்கள் பார்வைக்காக, தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது, ஏதேனும் ஆட்சே பனைகள் இருந்தால், தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.