/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு உடுமலை தொகுதியில் மாற்றம்
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு உடுமலை தொகுதியில் மாற்றம்
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு உடுமலை தொகுதியில் மாற்றம்
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு உடுமலை தொகுதியில் மாற்றம்
ADDED : ஆக 31, 2024 02:04 AM
உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உடுமலை தொகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் கமிஷன், 2025 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியிலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள், கடந்த, 20ம் தேதி துவங்கி, அக்., 18 வரை நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடிகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 8 சட்ட சபை தொகுதிகளில், வரைவு ஓட்டுச்சாவடிகளின் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில், ஏற்கனவே, 2,520 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில், புதிதாக, 9 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
மேலும், பிரிவு ஏற்படுத்துதல், கட்டட மாற்றம், ஓட்டுச்சாவடி மையம் மாற்றம், பெயர் மாற்றம் செய்யப்பட உள்ள ஓட்டுச்சாவடிகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், உடுமலை சட்ட சபை தொகுதியில், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல், ஏற்கனவே உள்ள, 294 ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், 2 ஓட்டுச்சாவடிகளில் பிரிவு ஏற்படுத்தியும், ஒரு ஓட்டுச்சாவடி கட்டடமும் மாற்றப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் தொகுதியில், எந்த மாற்றமும் இல்லாமல், 287 ஓட்டுச்சாவடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.