ADDED : பிப் 22, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; நீலகிரி வரையாடு திட்ட வனச்சரகம் சார்பில், வரையாடு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார். உதவி திட்ட இயக்குனர் கணேஷ்ராம் மற்றும் வனச்சரகர் செந்துார்சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வரையாடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

