/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்க்கால் துார்வாரணும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வாய்க்கால் துார்வாரணும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 25, 2024 11:08 PM

பொங்கலுார் : திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாய பணிகள் முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கின்றன. இதனால், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டி தொழிலாளர்களை திரட்டி பல இடங்களில் மனு கொடுக்கும் போராட்டங்கள் நடக்கின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. 100 நாள் தொழிலாளர்களைக் கொண்டு பி.ஏ.பி., வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பி.ஏ.பி., பாசனத்துக்கு விரைவில், தண்ணீர் திறக்கப்பட உள்ளது. பல இடங்களில் வாய்க்காலில் முட்புதர் மண்டியும், காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் கடை மடைக்குச் செல்வது கேள்விக்குறியாக மாறி உள்ளது.
அரசு வாய்க்காலை துார்வார நிதி ஒதுக்குவதில்லை. எனவே, வேலை இழந்துள்ள, 100 நாள் தொழிலாளர்களை வாய்க்கால் துார்வாரும் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

