/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவராகும் கனவு; சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள்
/
மருத்துவராகும் கனவு; சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள்
மருத்துவராகும் கனவு; சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள்
மருத்துவராகும் கனவு; சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 25, 2024 12:41 AM

''கனவு காணுங்கள்... ஆனால் கனவு என்பது நீ துாக்கத்தில் காண்பது அல்ல; உன்னை துாங்க விடாமல் செய்வதே கனவு'' என்கிறார் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். ஆம். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 27 மாணவ, மாணவியர் கவுன்சிலிங் மூலம் மருத்துவப் படிப்புக்கான கல்லுாரியை தேர்வு செய்ததன் மூலம், அவர்களது மருத்துவராகும் கனவு நனவாகிறது.
முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் முடிந்து, அரசு பள்ளிகளுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லுாரிகளை தேர்வு செய்த மாணவ, மாணவியர் விபரம், மாவட்ட கல்வித்துறைக்கு கிடைக்க பெற்றுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்ற, 27 மாணவ, மாணவர் தங்களுக்கான கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர்; 11 பேர் கல்லுாரிகளை தேர்வு செய்யாமல் உள்ளனர்.
எந்த மாணவர்... எந்தக் கல்லுாரி?
பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தமிழரசன் - ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை; வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுமதி, கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி வசந்த் - கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி சென்னை.
ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீதா - சேலம் மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவி சுரேகா - சென்னை, கற்பக விநாயகா மருத்துவக் கல்லுாரி; இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரதாதேவி - திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவி செல்வலட்சுமி - ஈரோடு நந்தா மருத்துவக் கல்லுாரி.
பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி விஷ்ணு - மருத்துவக்கல்லுாரி, ராமநாதபுரம்; புதுராமகிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சுபித்தா - பெரம்பலுார் தனலட்சுமி மருத்துவக் கல்லுாரி; வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கார்த்திக் - சென்னை கற்பக விநாயகா மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவி, ஸ்ரீ தர்ஷனி - சென்னை ராகாஷ் பல் மருத்துவக் கல்லுாரி.
ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி - மதுரை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி; இதே பள்ளி மாணவி சத்யாஸ்ரீ - திருவாரூர் இந்திரா மருத்துவக் கல்லுாரி; வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி சந்திரிகா - ஈரோடு, நந்தா மருத்துவக் கல்லுாரி.
பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி ருத்ரராஜன் - நாமக்கல், கே.எஸ்.ஆர்., பல் மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவர் கரண்தேவ் - விவேகானந்தா மருத்துவக் கல்லுாரி.
வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி யுகேஷ்வேல் - ஜே.கே.கே.என்., பல் மருத்துவக் கல்லுாரி, நாமக்கல்; முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி பூர்ணசந்திரன் - எம்.எம்.சி., பல் மருத்துவக் கல்லுாரி, மதுரை; பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சந்தியா - சென்னை, ராகாஷ் பல் மருத்துவக் கல்லுாரி.
கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சந்தோஷ் - சென்னை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி; இதே பள்ளி மாணவர் மணிகண்டன் - கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி. மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுஜித்குமார் - கடலுார் மருத்துவக் கல்லுாரி; பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி புகழேந்தி - அரியலுார் மருத்துவக் கல்லுாரி.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியை இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுப்புலட்சுமி, ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி சரோஜா, உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளி சதீஷ், ஜெய்வாபாய் பள்ளி ஷாலினி ஆகியோர் தேர்வு செய்துள்ளனர்.
----
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் 4 பேர், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரியை மருத்துவப்படிப்புக்காக தேர்வு செய்துள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரியைத் தேர்வு செய்த