/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
24 மணி நேரமும் குடிநீர் வீணாகும்... அதிகாரிகள் துாக்கம் கலைய மறுக்குது!
/
24 மணி நேரமும் குடிநீர் வீணாகும்... அதிகாரிகள் துாக்கம் கலைய மறுக்குது!
24 மணி நேரமும் குடிநீர் வீணாகும்... அதிகாரிகள் துாக்கம் கலைய மறுக்குது!
24 மணி நேரமும் குடிநீர் வீணாகும்... அதிகாரிகள் துாக்கம் கலைய மறுக்குது!
ADDED : ஜூலை 29, 2024 11:24 PM

தடுமாறும் வாகனம்
திருப்பூர், சந்திராபுரம் - செவந்தம்பாளையம் இடையே சமீபத்தில் ரோடு போடப்பட்டது. வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கவில்லை. இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.
- மோகன், சந்திராபுரம்.
விபத்து அபாயம்
திருப்பூர் - மங்கலம் ரோட்டில் புதிதாக மையத் தடுப்புச்சுவர் நிறுவப்பட்டு வருகிறது. ரிப்ளக்ட் ஸ்டிக்கர் ஒட்டாததால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
- ராம், மங்கலம்.
கால்வாய் அடைப்பு
திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, காமாட்சி அம்மன் நகர் இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது.
- பாலசண்முகம், ராக்கியாபாளையம் பிரிவு. (படம் உண்டு)
திருப்பூர், தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் சிக்னல் சந்திப்பு, பி.கே.ஆர்., காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி, துர்நாற்றம் வீசுகிறது.
- சம்பத், பி.கே.ஆர்., காலனி. (படம் உண்டு)
சாலை சேதம்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் பாலத்தின் கீழ் கேட்வால்வு சேதமடைந்து, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலை சேதமாகியுள்ளது.
- புருேஷாத்தமன், திருப்பூர். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், ராம் நகர் அடுத்த, கங்கா நகர் முதல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் அடிக்கடி வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- ராஜூ, கங்கா நகர். (படம் உண்டு)
வாகனம் இடையூறு
திருப்பூர், 17வது வார்டு, ஏ.டி., காலனியில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்தப்படுகிறது. பொருட்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளது. முறையாக சாலையை அளவீடு செய்ய வேண்டும்.
- ரஞ்சித், ஏ.டி., காலனி. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், 50வது வார்டு, கரட்டாங்காடு, 3வது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. ஆறு மாதமாக பலமுறை புகார் தெரிவித்தும், சரிசெய்யவே இல்லை.
- தருண், கரட்டாங்காடு. (படம் உண்டு)
திருப்பூர், பி.என்., ரோடு, பூலுவபட்டி சிக்னல் அருகே குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. சாலையும் சேதமாகிறது.
- மனோகரன், பூலுவப்பட்டி. (படம் உண்டு)
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப், ஸ்கூல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர், 24 மணி நேரமும் வீணாகிறது.
- ராஜரத்தினம், சேர்மன் கந்தசாமி நகர். (படம் உண்டு)
எரியாத விளக்கு
திருப்பூர், காங்கயம் ரோடு, பஸ் டிப்போ முன்புறம் ரவுண்டானாவில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- ஆனந்த், காங்கயம் ரோடு. (படம் உண்டு)
'பேட்ஜ்ஒர்க்' அவசியம்
திருப்பூர், லட்சுமி நகர், குலாலர் திருமண மண்டபம் சந்திப்பு வீதி வளைவில் சாலை சேதமாகியுள்ளது. திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- வரலட்சுமி, லட்சுமி நகர். (படம் உண்டு)
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பிரிட்ஜ்வே காலனி செல்லும் ஹார்வி ரோட்டில் நடுரோட்டில் குழி உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.
- ராஜேஷ்பிரபு, ஹார்வி ரோடு (படம் உண்டு)
ரியாக் ஷன்
பெயின்ட் அடிச்சாச்சு
திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் ஸ்டாப் நடுநிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதால், வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.
- பழனி, மேட்டுப்பாளையம். (படம் உண்டு)
ரோடு போட்டாச்சு
அவிநாசி பேரூராட்சி, சீனிவாசபுரம், ஜே.ஜே., கார்டனில் ரோடு போடாமல் ஜல்லி கொட்டி பணிகள் தாமதமாகி வந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், ரோடு போட்டுள்ளனர்.
- மகா செந்தில், சீனிவாசபுரம். (படம் உண்டு)