/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் திட்ட பணி: விரைவுபடுத்த 'அட்வைஸ்'
/
குடிநீர் திட்ட பணி: விரைவுபடுத்த 'அட்வைஸ்'
ADDED : மே 06, 2024 11:13 PM

திருப்பூர்;'கோடை கால தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என, ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி தலைமை வகித்தார்.
மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அனைத்து ஊராட்சிகளின் பி.டி.ஓ.,க்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும், தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிக்க தேவையான நடவடிக்கைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
தண்ணீர் வினியோக பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு, மும்முனை மின் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். 15வது நிதிக்குழு மானியம், பொது நிதி, ஜல்ஜீவன் திட்டத்தில், ஏற்கனவே துவங்கப்பட்ட குடிநீர் பணிகளை, விரைவுபடுத்த வேண்டும். நோய் பரவலை தடுக்க, குளோரின் கலந்த குடிநீர் வினியோகிக்க வேண் டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.