/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு; மாணவர்களுக்கு பாக்கெட் காலண்டர்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு; மாணவர்களுக்கு பாக்கெட் காலண்டர்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு; மாணவர்களுக்கு பாக்கெட் காலண்டர்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு; மாணவர்களுக்கு பாக்கெட் காலண்டர்
ADDED : பிப் 24, 2025 12:47 AM

திருப்பூர்; திருப்பூரில், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வில், மாணவ, மாணவியருக்கு பாக்கெட் காலண்டரை மாநகர போலீசார் வழங்கி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை, போதை பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில், மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர மதுவிலக்கு பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், 'போதை பொருட்கள் இல்லா திருப்பூர் மாநகரத்தை உருவாக்குவேன்' என்ற தலைப்பில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை போலீசார் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியருக்கு கடிதம், கட்டுரை என, பல போட்டிகளை நடத்தி வருகின்றனர். இச்சூழலில், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாக்கெட் காலண்டரை போலீசார் வழங்கி வருகின்றனர்.
அதில், ஒருபுறம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியதுடன், இவ்வாண்டு காலண்டர் மற்றும் மற்றொரு பக்கம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் தொடர்புஎண் மற்றும் 'டெடிகேட்டடு பீட்' போலீசாரின் தொடர்பு எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.