/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போதை' இளைஞர்கள் மோதல்; அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
/
'போதை' இளைஞர்கள் மோதல்; அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
ADDED : பிப் 24, 2025 01:03 AM

பல்லடம்; பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே மதுக்கடையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. உருட்டுக்கட்டை சகிதம் நடந்த மோதல், அரசு பஸ் - பைக் கண்ணாடிகள் உடைப்பு என பஸ் ஸ்டாண்ட் பகுதி களேபரமாக காட்சியளித்தது.
பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மதுக்கடையில், நேற்று இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இருதரப்பினரும் ஒருவரையொருவர் துரத்தி துரத்தி மோதலில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைய முயன்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்தெறிந்தனர்.
உருட்டு கட்டைகளுடன் விரட்டிச் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். ரோட்டில் நிறுத்தி இருந்த பைக்கின் கண்ணாடியை உடைத்ததுடன், கல்லால் அடித்தும் தாக்கினர்.
விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், துாத்துக்குடியை சேர்ந்த குணசேகரன், 18, புதுக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன், 24, மதன், 23, சுடலைமுத்து, 20, மாரிதங்கம், 24 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
மற்றொரு தரப்பை சேர்ந்த இருவர் காயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களில் சிலர் கஞ்சா போதையில்இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், இளைஞர்கள் கொலை வெறியாட்டம் ஆடியது பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.