/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்ந்து கருகும் மரக்கன்றுகள்; நுாறு நாள் திட்ட வேலை வீண்
/
காய்ந்து கருகும் மரக்கன்றுகள்; நுாறு நாள் திட்ட வேலை வீண்
காய்ந்து கருகும் மரக்கன்றுகள்; நுாறு நாள் திட்ட வேலை வீண்
காய்ந்து கருகும் மரக்கன்றுகள்; நுாறு நாள் திட்ட வேலை வீண்
ADDED : ஏப் 24, 2024 11:09 PM

பல்லடம்: பல்லடம் வட்டார கிராமங்களில், நுாறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள், தண்ணீர் இன்றி பசுமையை இழந்து பாழாகி வருகின்றன.
நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ், பல்வேறு கிராம மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்கீழ், ஒவ்வொரு கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
பல்லடம் வட்டாரத்தில், கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதற்கிடையே, கிராம ஊராட்சிகளில் பசுமையை ஏற்படுத்தும் நோக்கில், நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ், எண்ணற்ற மரக்கன்றுகள் கிராமங்கள் தோறும் நடப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, நடப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வருகின்றன.
மரக்கன்றுகள் பசுமையை இழந்து வருவதுடன், நுாறு நாள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிக்காக செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் மனித உழைப்பு ஆகியவையும் வீணாகி வருகின்றன. ஊராட்சிகள் தோறும் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரங்கள் முற்றிலும் காய்ந்து கருகி வீணாகும் முன், தண்ணீர் ஊற்றி அவற்றை பாதுகாக்க ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

