/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீரின்றி வறண்ட குளங்கள்; பருவ மழைக்கு எதிர்பார்ப்பு
/
தண்ணீரின்றி வறண்ட குளங்கள்; பருவ மழைக்கு எதிர்பார்ப்பு
தண்ணீரின்றி வறண்ட குளங்கள்; பருவ மழைக்கு எதிர்பார்ப்பு
தண்ணீரின்றி வறண்ட குளங்கள்; பருவ மழைக்கு எதிர்பார்ப்பு
ADDED : செப் 11, 2024 10:30 PM
உடுமலை : குளங்கள் தண்ணீரின்றி வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், குடிமங்கலம் வட்டார விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பருவமழையையும் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை குடிமங்கலம், மடத்துக்குளம், பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் முக்கிய தேவையாக உள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில், 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள இக்குளங்களுக்கு, பருவமழை காலங்களில், நீர்வரத்து இருக்கும்.
இந்நிலையில், நடப்பாண்டு, கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை. இதனால், குளங்களில், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைய துவங்கியது. தற்போது பெரும்பாலான குளங்கள், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. சாரலாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழையும் இடைவெளி விட்டுள்ளது. இப்பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை.
விவசாயிகள் கூறியதாவது: கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யாமல், வறட்சி துவங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் துவங்கியுள்ள நிலையில், குளங்களில் நீர் நிரப்பினால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.