/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துபாய் 'பிராண்ட்ஸ் ஆப் இந்தியா' கண்காட்சி திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
/
துபாய் 'பிராண்ட்ஸ் ஆப் இந்தியா' கண்காட்சி திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
துபாய் 'பிராண்ட்ஸ் ஆப் இந்தியா' கண்காட்சி திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
துபாய் 'பிராண்ட்ஸ் ஆப் இந்தியா' கண்காட்சி திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
UPDATED : செப் 07, 2024 03:28 AM
ADDED : செப் 07, 2024 12:57 AM

திருப்பூர்:துபாய் கண்காட்சியில் பங்கேற்க திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர், பிரபல உள்நாட்டு 'பிராண்டட்' நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியை இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் (சி.எம்.ஏ.ஐ.,) துபாயில் நடத்துகிறது. 'பிராண்ட்ஸ் ஆப் இந்தியா' என்ற பெயரிலான வரும் நவ., 12 முதல் 14 வரை நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் ஆனந்த் கோல்ச்சா, அனுராக் ஆகியோர், நேற்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினர். பொதுசெயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்டோர், திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி படிநிலைகளை விளக்கினர்.
சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில்,''பிராண்ட் திருப்பூர் - கிரீன் திருப்பூர்' என்ற தனித்துவத்தை அடையும் இலக்குடன், பசுமை சார் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த புளூசைன் மற்றும் 'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்,'' என்றார்.
சிறப்பு அழைப்பாளர் ஆன்ந்த கோல்ச்சா பேசுகையில், ''வெளிநாட்டு வர்த்தகர்களை கவரும் வகையிலான கண்காட்சி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் வர்த்தகம் செய்ய, வழிகாட்டியாக அமையும். கொல்கத்தா, நொய்டா, பெங்களூரு நகரங்களை சேர்ந்த உற்பத்தியாளர் பங்கேற்கின்றனர். திருப்பூர் ஏற்றுமதியளர்களும் பங்கேற்று, புதிய வர்த்தக வாய்ப்புகளை ஈர்க்கலாம்,'' என்றார்.
---------------------------
துபாயில் நடக்கும் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க, இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு அழைப்பாளர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.