/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீக்குளிக்க ஐடியா கொடுக்கும் ' டுபாக்கூர் ' மீடியா! n கமிஷனர் 'சாட்டைய சுழற்ற' வேண்டும் தீயா...
/
தீக்குளிக்க ஐடியா கொடுக்கும் ' டுபாக்கூர் ' மீடியா! n கமிஷனர் 'சாட்டைய சுழற்ற' வேண்டும் தீயா...
தீக்குளிக்க ஐடியா கொடுக்கும் ' டுபாக்கூர் ' மீடியா! n கமிஷனர் 'சாட்டைய சுழற்ற' வேண்டும் தீயா...
தீக்குளிக்க ஐடியா கொடுக்கும் ' டுபாக்கூர் ' மீடியா! n கமிஷனர் 'சாட்டைய சுழற்ற' வேண்டும் தீயா...
ADDED : செப் 10, 2024 02:35 AM
விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை பார்க்க சித்ராவும், மித்ராவும் புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அவ்வழியே மாநகராட்சி பள்ளி கண்ணில் தென்படவும், ''அக்கா, வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்க, என்.ஆர்.பி.சி., திட்டத்தில், இதே ஸ்கூலில் துவக்க விழா நடந்தது. விழா நடந்ததோடு சரி. பயிற்சி என எதுவும் நடக்கவில்லை. கார்ப்ப ரேஷனும், கல்வித்துறையும் கண்டுகொள்ளவில்லையாம். திட்டத்தை துவக்கிற மாதிரி போட்டோ எடுத்துட்டு, அப்படியே கிடப்பில் போட்டுட்டாங்க...''
''அடக்கொடுமையே...'' என்ற சித்ரா, ''லாட்டரி வழக்குகளை உயரதிகாரி கண்காணித்தால் பரவாயில்லை'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''சிட்டியில், சமீப காலமாக குற்றத்தடுப்பு நடவடிக்கை படுஜோராக நடக்கிறது. ஆனாலும், சட்ட விரோத கும்பல்களுடன், சில போலீசார் கைகோர்த்து மறைமுகமாக வேலை செய்யறாங்ளாம். சிட்டி ஸ்டேஷன் வாரியாக லாட்டரி, மதுபாட்டில் வழக்குகளில், பிடிபடும் தொகையை, குறைத்து காட்டி, பெரிய அமவுன்ட் மூடி மறைச்சுறாங்க. கைது செய்யப்படும் நபரும், போலீசை பகைத்து கொள்ளாம, இதப்பத்தி வெளியே சொல்றதில்லை. இந்த விஷயத்தில, உயரதிகாரி கொஞ்சம் கண் காணிச்சா பரவாயில்ல,'' என்றாள் சித்ரா.
துப்பாக்கி 'விளம்பரம்'
''சரியா சொன்னீங்க,'' என்ற மித்ரா, ''துப்பாக்கி ரோந்து எல்லாம் போட்டோக்கு போஸ் கொடுக்க தான்,'' என்றாள்.
''எப்டி சொல்ற?''
''கொஞ்ச நாளாக, ரூரல் பகுதியில் நடக்கும் திருட்டு, கொள்ளை சம்பவம் அதிக மாயிடுச்சு. அதிலும், காங்கயம் பக்கத்துல திருட்டு ஆசாமிகள், போலீசாரை அடிக்க பார்த்தாங்க. இதனால, ராத்திரி ரவுண்ட்ஸ் போற போலீஸ் அத்தனை பேரும், துப்பாக்கியுடன் தான் செல்ல வேண்டுமென டி.ஐ.ஜி,. அதிரடியா உத்தரவு போட்டுட்டாரு,''
''ஆனா, முதல் ரெண்டு மூனு நாள், கொஞ்சம் சுறுசுறுப்பா போனாங்க. அதுக்கப்புறம், பெயருக்கு தான் போறாங்களாம். துப்பாக்கியோட போற மாதிரி போட்டோ எடுத்துட்டு, அதிகாரிகளுக்கு அனுப்பிச்சுட்டு, அறைகுறையாத்தான் போயிட்டு வராங்களாம். இத நோட்டமிட்ட பலே கில்லாடி கும்பல், லிங்கேஸ்வரர் ஊரு பக்கத்துல ஓய்வு பெற்ற போலீஸ் உயரதிகாரி வீட்டுல துணிச்சலா கைவரிசைய காட்டிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''ம்ஹூம் என்னத்த சொல்ல,'' சலித்து கொண்ட சித்ரா, ''ஒரு புறாவுக்கு அக்கப்போரான்னு வடிவேல் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது,'' தொடர்ந்தாள்.
'பிளக்ஸ் பேனர்' சர்ச்சை
''மித்து, விநாயகர் சதுர்த்திக்காக, ஹிந்து முன்னணி, அப்புறம் பல அமைப்பினர், பொதுமக்கள் என, பலரும் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அப்படி, மங்கலம் ரோடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான பிளக்ஸ் வச்சு இருக்காங்க,''
''அதுல, ஏ.டி.எம்.கே., - டி.எம்,கே.,ன்னு பல கட்சிக்காரங்க போட்டோ இருந்தது. இதனை, ஆளும்கட்சியை சேர்ந்த ஒருவர் போட்டோ எடுத்து கட்சி குரூப், பேஸ்புக்கில போட்டுட்டாரு. அதில, இதுக்கு முன்னாடி போராட்டத்தில் நம்ம மா.செ.,வை எதிர்த்த நபர்களுடன் நம்மோட கட்சிக்காரர் கூட்டு வைத்தது போன்று கருத்து பதிவு செய்திருந்தார். இப்படி ஏன் தவறாக பதிவை போட்டிங்கனு, சம்பந்தப்பட்ட நபர்கள், அவரை கூப்பிட்டு காரசாரமா கேள்வி கேட்டிருக்காங்க...'' சித்ரா விளக்கினாள்.
''அக்கா, இந்த மேட்டரை நானும் கேள்விப்பட்டேன். அந்த பதிவை போட்ட நபர் மீது கட்சியில் அதிருப்தியில் இருக்கு. இதுக்கு முன்னாடி, பஸ் ஸ்டாண்டுல கடையை உள்வாடகை விடுறது, இல்லீகல் பார் வச்சதுல சம்பந்தப்பட்டிருக்காரு. அதுமட்டுமில்லாம, 'சரக்கு' கடத்தல் கேஸில் போலீசார் அவரை அரெஸ்ட்டும் செஞ்சாங்க,'' என்றாள் மித்ரா.
டுபாக்கூர்ஸ் அட்டகாசம்
''ஓ... விஷயம் அப்படிப்போகுதா? பஸ் ஸ்டாண்டை கொஞ்சம் உன்னிப்பா கவனித்தால் நன்றாக இருக்கும்,'' என்றாள் சித்ரா.
''ஸ்மார்ட் சிட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் மாணவர்கள் மோதல், இளம் வயதினர் பொது இடத்தில் அத்துமீறல், கடைகளில் மிரட்டி பணம் வாங்குவது என்பது பத்தி, வீடியோ அவ்வப்போது சர்வசாதாரணமா வெளி வருது. இதுல கொஞ்சம் ஆபத்தும் இருக்கு,''
''பத்திரிக்கையாளர் என்கிற போர்வையில் நிறைய பேர், புது பஸ் ஸ்டாண்டில் சுத்தறாங்க. இவர்கள், போட்டோ, வீடியோ எடுக்கறது மட்டுமில்லாம, மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடறாங்க. பாரபட்சம் இல்லாமல் உயரதிகாரி இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, பெரிய பிரச்னை வர்றதுக்கு முன்னாடியே களை எடுக்கணும். இல்லாட்டி, என்னைக்காவது ஒரு நாள் பிரச்னை வரும் பாரு,'' என்றாள் சித்ரா.
''அக்கா, நிருபர்கள் நீங்க சொன்னதும் எனக்கும் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. திருப்பூர் கலெக்டர் ஆபீசுக்கு மனுக்கொடுக்க வருவோரை குழப்பி, தீக்குளிக்க ஐடியா கொடுத்து சில டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ் வம்புல மாட்டி விடறாங்க. இப்படி செய்தாத்தான், 'டிவி' யில செய்தி வரும்... சீக்கிரமா தீர்வு கிடைக்கும்னு தப்பா வழிகாட்டிடறாங்க. இதனால், பாமர மக்களும், கெரசினோட வந்துடறாங்க,''
''மெயின் கேட்ல விடமாட்டாங்கனு, கோர்ட்டுக்கு போற மாதிரி தென்புற ரோட்டில் வந்து, கலெக்டர் ஆபீசுக்குள்ள கேனுடன் வந்திடறாங்க. போலீசார் அவர்களை தடுத்து, ஜி.எச்.,க்கு அனுப்பி, கவுன்சிலிங் ஏற்பாடு பண்றாங்களாம். ஆஸ்பத்திரிலதான் உண்மையை போட்டு உடைச்சிருக்காங்க. மனு கொடுக்க போறோம்னு சொன்னதும், தீக்குளிங்கனு ஐடியா கொடுத்து, இப்படி மாட்டி விட்டுட்டாங்க...''னு புலம்பி தள்ளிட்டாங்களாம்,''
''ஆமான்டி மித்து. இந்த டூப்ளிகேட் ரிப்போர்ட்டர்ஸ் மீடியா மீது, போலீஸ் கமிஷனர் 'சாட்டைய சுத்தினா' பரவாயில்ல தான்,'' என்றாள் சித்ரா.
குறையாத 'குட்கா'
''குட்கா விற்பனையை எப்படி தடுத்தாலும், மாறுபட்ட வழிகளில் விற்பனை நடந்துட்டுத்தான் இருக்குது. புட்சேப்டி ஆபீசர்களும், போலீசாரும் சேர்ந்து, பெட்டிக்கடைகளில் ஆய்வு செஞ்சு, குட்கா விற்பனையை முடக்கிட்டாங்க. சில கடைகளை நிரந்தரமா மூடிட்டாங்க,''
''இருந்தாலும், பலவஞ்சிபாளையம் பகுதிகளில், குட்கா சேல்ஸ் கொடி கட்டி பறக்குதாம். பெட்டிக்கடை பக்கத்துல நின்னுட்டு, ரெகுலர் கஸ்டமருக்கு தடையில்லா குட்கா சேவையை (?) வழங்கிட்டு இருக்காங்களாம். இத போலீஸ் தான் கண்டுபிடிச்சு, நடவடிக்கை எடுக்கோணும்,'' மித்ரா ஆவேசமாக சொன்னாள்.
''நம்ம டி.ஆர்.டி.ஓ., ஆபீசருக்கு, பி.டி.ஓ.,ஸ் மேல என்ன கோபம்னு தெரியலை. ரிவியூ மீட்டிங் நடக்கறப்ப, பி.டி.ஓ., களை வெளியே போங்கனு அனுப்பிடறாரு. அரசு திட்டப்பணி மற்றும் வளர்ச்சிப்பணிகளை செய்வதில் சில நேரம் லேட் ஏற்படலாம்,''
''வேணுமின்னு லேட் செஞ்சாலும், மேலதிகாரிகள் கண்டுபிடிக்க முடியும். அப்படியிருந்தும், கலெக்டர் ஆபீசுல ஆய்வுக்கூட்டம் நடக்கும் போதெல்லாம், பி.டி.ஓ.,களை, வேலையை முடிச்சுட்டு வாங்க... இப்ப போங்க'னு வெளியே போகச் சொல்றாராம். இதனால், எவ்வளவு வேலை செஞ்சாலும், இப்படித்தான் 'இல்ட்ரீட்' பண்றாங்கனு,' புலம்பறாங்க,''
''டிரான்ஸ்பர் வாங்கிட்டு போகணும்னு இப்படி செய்யறாங்கன்னு கூட, ஊரக வளர்ச்சித்துறையில ஒரு பேச்சு உலா வருது மித்து,'' சித்ரா சொன்னாள்.
போறதுக்குள்ள 'அள்றாங்க'
''அக்கா... லிங்கேஸ்வரர் ஊரில, ரியல் எஸ்டேட்காரங்களுக்கு சாதகமாக ரோடு போடறதுக்காக, சொல்லிட்டு, 7.5 லட்சம் சத்தமில்லாம கைமாறிடுச்சாம். அதிலும், பொன்னான நிர்வாகி தலைமையில தான், இந்த பிரகாசமான டீல் முடிஞ்சுதாம். பணத்தை முக்கியமானவங்க பிரிச்சு வச்சுட்டாங்க...'' மித்ரா சொன்னாள்.
''மித்து அதே பகுதியில இறைச்சி கடைக்காரங்கிட்ட ஆபீசர்ஸ் 'மாமூல்' வாங்கி கொளுத்தறாங்களாம். எப்படின்னு கேட்டா, மட்டனுக்கு லைசென்ஸ் வாங்கிட்டு, சிக்கன் விக்கிறாங்களாம். அதேபோல, சிக்கன் கடையில மட்டன் விக்கிறாங்களாம். இத மக்கள் புகாரா சொன்னாலும் இதுவரைக்கு நோ ரெஸ்பான்ஸாம்...''
''இன்னும் நாலு அமாவாசை தான் பதவியில இருக்கப்போறோம்னு தெரிஞ்சுகிட்ட சில ஊராட்சி தலைவர்கள், குடிநீர் இணைப்புக்கு வசூலில் பின்னி எடுக்கறாங்களாம். குறிப்பா, அவிநாசிக்கு மேற்கு திசையில இருக்கற ஊராட்சிகளில், இந்த மேட்டர் கொடி கட்டிப் பறக்குதாம்...'' என்ற சித்ரா, ''மித்து, வண்டிய நிறுத்திட்டு வர்றேன். நீ இங்கயே நில்லு,'' என்றவாறு பார்க்கிங் பகுதிக்கு சென்றாள்.