/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாலகத்தில் பறவைகள் குறித்து சூழலியல் விழிப்புணர்வு
/
நுாலகத்தில் பறவைகள் குறித்து சூழலியல் விழிப்புணர்வு
நுாலகத்தில் பறவைகள் குறித்து சூழலியல் விழிப்புணர்வு
நுாலகத்தில் பறவைகள் குறித்து சூழலியல் விழிப்புணர்வு
ADDED : ஆக 13, 2024 11:52 PM

உடுமலை;பூளவாடி கிளை நுாலகத்தில், பறவைகள் குறித்த சூழலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பூளவாடி கிளை நுாலகம் வாசகர் வட்டம், திருப்பூர் இயற்கை கழகம் சார்பில் குழந்தைகளுக்கான பறவைகள் குறித்த சூழலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், பல்வேறு பறவைகளின் புகைப்படங்களை கொண்டு குழந்தைகளுக்கு விளக்கமளித்தார். பறவைகளின் எச்சம் வாயிலாக, மரங்கள் வளர்வது, வனம் உருவாவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் பறவை இனங்களின் வாழ்வியல் முறைகள், வன விலங்குகளுக்கு மனிதர்கள் வழங்கும் உணவுகளால் ஏற்படும் ஆபத்து, திருப்பூர் நஞ்சராயன் குளத்திற்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் குறித்த அரிய தகவல்களையும், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களிடம் பறவைகள் குறித்து, வினா-விடை போட்டிகள் நடத்தப்பட்டது. விடை கூறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நுாலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.