/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 01, 2024 12:43 AM

உடுமலை : மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில், சமீபத்தில் மின்கட்டண உயர்வை அரசு அறிவித்தது. இதைக்கண்டித்து, அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், உடுமலையில் இ.கம்யூ., சார்பில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தாலுகா செயலாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக உறுப்பினர் சுப்பிரமணியம், தாலுகா துணை செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.
மின்கட்டணத்தை மாதந்தோறும் கணக்கிட்டு, வசூல் செய்யும் நடவடிக்கையை உடனடியாக துவக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.