/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பயிற்சி மூலம் திறன்மிக்க மனித வளம்'
/
'பயிற்சி மூலம் திறன்மிக்க மனித வளம்'
ADDED : ஏப் 29, 2024 11:40 PM
திருப்பூர்:'நிப்ட்-டீ' கல்லுாரி ஆராய்ச்சித்துறை, 'நபார்டு' வங்கியுடன் இணைந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கான, 'நாப்ஸ்கில்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மேம்பட்ட ஆடை உற்பத்தி என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
சான்றிதழ் வழங்கும் விழா, 'நிப்ட்-டீ' கல்லுாரி அடல் இன்குபேஷன் மையத்தில் நேற்று நடந்தது. இன்குபேஷன் மைய கமிட்டி தலைவர் செந்தில் குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் (வளர்ச்சி) அசோக் குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் கார்த்திகைவாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அடல் இன்குபேஷன் மைய தலைமை செயல்பாட்டு அதிகாரி அருள்செல்வன் வரவேற்றார். இன்குபேஷன் மைய கமிட்டி தலைவர் செந்தில் குமார் பேசுகையில், ''நிப்ட் -டீ கல்லுாரியில் மாணவர்களுக்கு, செயல்முறை பயிற்சி அளிக்கப்படுவதால், உடனடியாக வேலைவாய்ப்பில் இணைய முடியும். இவ்வாறான பயிற்சிகள் மூலம், ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு திறமையான மனித வளத்தை உருவாக்க முடியும்,'' என்றார்.

