/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டு தண்ணீர் தொட்டிகளில் பொங்கும் கழிவுநீர் ஊற்று
/
வீட்டு தண்ணீர் தொட்டிகளில் பொங்கும் கழிவுநீர் ஊற்று
வீட்டு தண்ணீர் தொட்டிகளில் பொங்கும் கழிவுநீர் ஊற்று
வீட்டு தண்ணீர் தொட்டிகளில் பொங்கும் கழிவுநீர் ஊற்று
ADDED : ஆக 25, 2024 11:26 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பு, விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதாகும். இங்கு உரிய கழிவு நீர் கால்வாய் வசதி இல்லை. டிஸ்போசபிள் பாயின்ட் இன்றி கழிவு நீர் கடந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. ரோட்டில் பாய்ந்தும், தனியார் இடத்தில் தேங்கியும் காணப்படுகிறது. துர்நாற்றம், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
தற்போது கழிவுநீர் நிலத்தில் இறங்கி, சுற்றுப்பகுதி வீடுகளில் உள்ள நிலமட்டத் தொட்டிகளில் ஊற்று போல் சென்று கலக்கிறது. தொட்டியில் உள்ள நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கவுன்சிலர் தனலட்சுமி கூறுகையில், ''இப்பகுதியில் கழிவுநீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்க வசதியில்லை. கழிவுநீர் தேங்கும் பகுதியிலிருந்து மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து குழாய் பதித்து செட்டிபாளையம் பகுதியில் பிரதான கால்வாய் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தரப்பில் தாமதமாகிறது. விரைவில் பணி துவங்கப்படும்'' என்றார்.

