/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிட்ஸ் கிளப் பள்ளியில் மாணவ தலைவர்கள் தேர்வு
/
கிட்ஸ் கிளப் பள்ளியில் மாணவ தலைவர்கள் தேர்வு
ADDED : ஜூலை 12, 2024 12:40 AM

திருப்பூர் : திருப்பூர், கிட்ஸ் கிளப் பள்ளியில், இணைய தள ஓட்டளிப்பு முறையில் மாணவ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ தலைவர்கள் பதவியேற்பு நடந்தது. டாக்டர்கள் பிரவின், கிருத்திகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பல்வேறு துறை மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, அவரவர் பதவிக்கான முக்கியத்துவம் குறித்து பேசினர்.
பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி, பள்ளி முதல்வர் நிவேதிகா, இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ், பள்ளி துணை முதல்வர் சுமையா ஆகியோர் பேசினர். 'தலைமை என்பது, தான் சிறந்தவராக இருப்பது மட்டுமில்லை. மற்ற அனைவரையும் சிறந்தவர்களாக மாற்றுவதாகும். மாணவர்கள், எதிர்காலத்தில் சிறந்த இளைஞர்களாக திகழ வேண்டும்' என அறிவுரை வழங்கப்பட்டது.

