/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாய காத்திருக்கும் மின் கம்பங்கள்
/
சாய காத்திருக்கும் மின் கம்பங்கள்
ADDED : ஆக 13, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;கரடிவாவி -- அனுப்பட்டி செல்லும் ரோட்டில், பெரும்பாலான மின்கம்பங்கள், சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன.
பொதுமக்கள் கூறுகையில், ''இவை அனைத்தும் உயர் அழுத்த மின் கம்பங்கள். கம்பம் ஏதேனும் சாய்ந்தால், இணைப்பில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அருகில்தான், கரடிவாவி துணை மின் நிலைய பகிர்மான அலுவலகம் உள்ளது. இருப்பினும், இவை குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
விபத்து ஏற்படும் முன் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்'' என்றனர்.

