/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றம் தரும் எம்ப்ராய்டரி ' லேஸ்' மதிப்பு உயரும் ஆடைகள்
/
ஏற்றம் தரும் எம்ப்ராய்டரி ' லேஸ்' மதிப்பு உயரும் ஆடைகள்
ஏற்றம் தரும் எம்ப்ராய்டரி ' லேஸ்' மதிப்பு உயரும் ஆடைகள்
ஏற்றம் தரும் எம்ப்ராய்டரி ' லேஸ்' மதிப்பு உயரும் ஆடைகள்
ADDED : ஜூன் 20, 2024 04:54 AM

திருப்பூர், : மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில், எம்ப்ராய்டரி லேஸ் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.
மதிப்புக்கூட்டப்பட்ட பின்ன லாடை ரகங்கள் தயாரிப்பைத் தான் ஏற்றுமதியாளர்களும், வர்த்தகர்களும் விரும்புகின்றனர். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில், மதிப்பு கூட்டிய ஆடை தயாரிப்புக்காக, கலப்பிழை துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மெட்டல் பொருட்கள், மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள் என, பல்வேறு பொருட்கள் புதிய டிசைனில் இடம்பெறுகின்றன.
அந்தவரிசையில், பெண்கள், குழந்தைகள், சிறுமியருக்கான ஆடை உற்பத்தியில், ஆடையின் மதிப்பை உயர்த்துவதில், எம்ப்ராய்டரி லேஸ் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. பருத்தி நுாலிழைகளில் இருந்து தயாரிக்கப்படும் 'லேஸ்'கள், ஆடைகளுடன் இணைந்து வடிவமைத்து, சாயமிடும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.