/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் வாடல் நோய் கணக்கெடுக்க வலியுறுத்தல்
/
தென்னையில் வாடல் நோய் கணக்கெடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 02:27 AM
உடுமலை:தென்னையில் வேர் வாடல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், விரைவில் கணக்கெடுப்பு நடத்தவும், நோய் தடுப்பு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூரில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது: தமிழக அளவில், கோவை - திருப்பூர் மாவட்டங்களில் மட்டும், 4.50 கோடி தென்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றில், ஒரு கோடி தென்னை மரங்களுக்கு வேர்வாடல் நோய் பரவியிருக்க வாய்ப்புள்ளது. நான்கு கட்டமாக பரவும் இந்நோய், தாக்கம் அதிகரித்து, ஓலை மஞ்சள்நிறமாக மாறிய பிறகுதான் தெரிகிறது.
வேளாண்துறை, தோட்டக்கலைத்துறையினர், பாதிக்கப்பட்ட தென்னை குறித்து கணக்கெடுப்பை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.