/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருநங்கையருக்கு வேலைவாய்ப்பு மார்ச் 9ல் விழிப்புணர்வு மாரத்தான்
/
திருநங்கையருக்கு வேலைவாய்ப்பு மார்ச் 9ல் விழிப்புணர்வு மாரத்தான்
திருநங்கையருக்கு வேலைவாய்ப்பு மார்ச் 9ல் விழிப்புணர்வு மாரத்தான்
திருநங்கையருக்கு வேலைவாய்ப்பு மார்ச் 9ல் விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : பிப் 22, 2025 07:03 AM
திருப்பூர்; திருநங்கையருக்கு, விளையாட்டு பயிற்சி வாயிலாக வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தும் நோக்கில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, அவிநாசியில் நடத்தப்பட இருக்கிறது.
திருநங்கையர் நலன் சார்ந்து செயல்படும், 'மங்கையானவன்' அறக்கட்டளை சார்பில், அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி நடத்தப்படுகிறது. அடுத்த மாதம், 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. இதில், ஆண்களுக்கு, 4 கி.மீ., பெண்களுக்கு, 3 கி.மீ., ஓட்டப் போட்டியும், மூத்தோருக்கு, 2 கி.மீ., வாக்கத்தான் மற்றும் 5, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு, 3 கி.மீ., 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கி.மீ., ஓட்டப்போட்டி நடத்தப்படுகிறது.
பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், வரும், 28ம் தேதிக்குள் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
அறக்கட்டளையினர் கூறியதாவது:
திருநங்கையர், விளையாட்டுத் துறையில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதன் வாயிலாக, அவர்களுக்கு உடற்கல்வி துறை சார்ந்த வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில், எங்கள் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
ஆர்வமுள்ள திருநங்கையர் பலர், மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டில் பங்கேற்க செய்து வருகிறோம். அழகு கலை, சமையல் உள்ளிட்ட துறைகளில் திறமை பெற்றவர்களாக திருநங்கையர் பலர் சிறந்து விளங்குகின்றனர். அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் உள்ளன.
அதே போன்று, போட்டி தேர்விலும் இட ஒதுக்கீடு அடிப்படையில், திருநங்கையர் அரசு வேலை பெற முடியும். இதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.
அதை நோக்கமாக கொண்டே, பொதுப்பிரிவினர் பங்கேற்கும், இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 86672-25698 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.