/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொறியியல் பணி ரயில் இயக்கம் மாற்றம்
/
பொறியியல் பணி ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : மார் 11, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : திருச்சி போர்ட் - திருச்சி ஜங்ஷன் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதனால், திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்: 16843) இன்று (11ம் தேதி), வரும், 18ம் தேதி இரு நாட்கள் திருச்சிக்கு பதிலாக, மதியம், 2:20 மணிக்கு கரூரில் இருந்து பயணத்தை துவங்கும். இரு நாட்களும் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு புறப்படும் இணை ரயில் (எண்:16844) வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில், 50 நிமிடம் நிறுத்தி, அதன் பின்னர் இயக்கப்படும்.
ஈரோடு - திருச்சி ரயில் (எண்: 56106) கரூர் வரை மட்டும் இயக்கப்படும்; கரூர் - திருச்சி இடையே பயணிக்காது என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.