/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில்முனைவோர் பேட்டி 3 பேட்டிகள்
/
தொழில்முனைவோர் பேட்டி 3 பேட்டிகள்
ADDED : செப் 02, 2024 12:31 AM

என் தந்தை வாழைப்பழம் வியாபாரி. பண்டிகை காலம், விசேஷ காலங்களில் வாழைப்பழங்களை சில்லறை, மொத்தமாக வியாபாரம் செய்து வந்தோம். விடுமுறை நாட்களில் அவருடன் குடும்பமாக இதுதொடர்பான பணியை மேற்கொள்வோம்.
கல்லுாரி படிப்பை முடித்து விட்டு, வங்கியில் பணி கிடைத்து சில மாதங்கள் பணியாற்றினேன். அப்போது, தந்தையின் தொழிலை விரிவுபடுத்த யோசனை எழுந்தது. இதுதொடர்பாக, பெற்றோர், சகோதரர் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது.
திருமணங்களுக்கு வாழைப்பழம் கொடுக்க ஆரம்பித்து, ஐஸ்கிரீம், பீடா ஒவ்வொன்றையும் வழங்க ஆரம்பித்து, பந்தி முதல் பந்தல் வரை அனைத்தும் செய்யக்கூடிய 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனமாக மாற்றினோம். இதற்கான அனைத்து பணிகளையும் கூட்டு குடும்பமாக நின்று நடத்த ஆரம்பித்தோம். திருமணத்துக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்தோம்.
எனது வாழ்க்கை, 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து, தற்போது, 5 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் அளவுக்கு மாறியுள்ளது. பணி காரணமாக, பல விசேஷ நாட்களில் கூட வீட்டில் மனைவி, குழந்தை, பெற்றோருடன் நேரம் செலுத்த முடியாது. கடுமையான உழைப்பால், இன்றைய சமுதாயத்தில் பலரும் பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.
உழைக்கிறவனுக்கு, உலகம் பெரிது. எதை யோசித்தாலும், பெரிதாக யோசிக்க வேண்டும் என்று எனது தந்தை அடிக்கடி கூறிய வார்த்தை தான், எனது தொழிலுக்கு மூலதனம். இளைஞர்கள் சுயதொழிலில் இறங்கினால், நாலு பேருக்கு நாம் வேலை தர முடியும்.
அதனால் அந்த குடும்பம் இருக்கும். அனைத்தும் ஒரு சங்கிலி தான். சுயதொழிலில் பல வெற்றிகளையும், தனித்திறமைகளையும் வளர்க்க முடியும்.