/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரச்சான்று எட்டு வார கால 'ஆன்லைன்' பயிற்சி ஐ.கே.எப்., கண்காட்சியில் விழிப்புணர்வு
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரச்சான்று எட்டு வார கால 'ஆன்லைன்' பயிற்சி ஐ.கே.எப்., கண்காட்சியில் விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரச்சான்று எட்டு வார கால 'ஆன்லைன்' பயிற்சி ஐ.கே.எப்., கண்காட்சியில் விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரச்சான்று எட்டு வார கால 'ஆன்லைன்' பயிற்சி ஐ.கே.எப்., கண்காட்சியில் விழிப்புணர்வு
ADDED : செப் 06, 2024 03:21 AM

திருப்பூர்;சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக கடமைகள் தொடர்பான எட்டு வாரகால ஆன்லைன் பயிற்சி தொடர்பாக, மத்திய அரசின் அமைப்பு, ஐ.கே.எப்., கண்காட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின், திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆயத்த ஆடை, 'மேட் அப்' மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் இயங்கி வருகிறது. திருப்பூர் ஏற்றுமதியளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
வரும் காலங்களில், வளர்ந்த நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக கடமைகளுக்கான தரச்சான்ற கட்டாயமாக வாய்ப்புள்ளது. தொலைநோக்கு பார்வையுடன், திருப்பூர் ஏற்றுமதியளர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.
ஆயத்த ஆடை, ஜவுளி பொருட்கள், வீட்டு அலங்கார ஜவுளிதுறை கவுன்சில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த புளூசைன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்நிறுவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக கடமைகள் தொடர்பாக எட்டு வாரகால ஆன்லைன் பயிற்சி அளிக்க உள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, ஜவுளித்துறை முதன்மை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சியை நேற்று முன்தினம் திறந்து வைத்த, செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், நிர்வாகிகளுடன் சென்று, அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள, புளூசைன் நிறுவனம் பங்கெடுக்கும் ஸ்டாலை பார்வையிட்டு, சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
வரும் காலங்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பசுமை சான்றிதழ் இருந்தால் மட்டுமே, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட முடியும். எனவே, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இத்தகைய பயிற்சியில் இணைந்து, வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, தமிழக அரசின் ஜவுளித்துறை முதன்மை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
தயாராக வேண்டும்!
-----------------
இதுகுறித்து, ஆயத்த ஆடை, மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்கார துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக கடமைகள் தொடர்பாக, புளூசைன் நிறுவனத்துடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அந்நிறுவன சான்றிதழ் இருந்தால், ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுமதியாளருக்கு வரவேற்பு கிடைக்கும்.
ஏற்றுமதியாளர்களுக்காக, எட்டு வாரகால சிறப்பு ஆன்லைன் பயிற்சி ஏற்பாடு செய்துள்ளோம்; பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். நாடு முழுவதும், ஏழு நகரங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக கடமைகள், வளர்ந்த நாடுகளில் விரைவில் கட்டாயமாக்க வாய்ப்புள்ளது. அதற்கு பிறகு, சான்றிதழ் இருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். திருப்பூர், முன்கூட்டியே அதற்கு தயாராக வேண்டும் என்றபதால், ஆன்லைன் பயிற்சி ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.